அமர்நாத் யாத்திரை ஏற்பாடு குறித்து அமித்ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம்

புதுடெல்லி: அமர்நாத் யாத்திரை ஏற்பாடு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்தியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் இருப்பார்கள்.

மேலும் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் விவாதிக்கப்படும். மேலும், கடந்தாண்டு 3.45 லட்சம் பேர் புனித யாத்திரையில் கலந்துகொண்டனர். அவர்களில் 45 சதவீதம் பேர் பால்டால் வழியிலும், மீதமுள்ள 55 சதவீதம் பேர் பஹல்காம் வழியாகவும் வருகை தந்தனர். இந்தாண்டு அந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயரும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் வரும் 23ம் தேதி யானைகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளதாக வனத்துறை தகவல்

முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை