உடுமலை அருகே சூறாவளியுடன் கனமழை; தென்னை, வாழை மரங்கள் முறிந்து சேதம்: பண்ணை சரிந்து 6 ஆயிரம் கோழிகள் பலி

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சாமராயப்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறாவளியுடன் பெய்த மழையால் ஏராளமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சாளரப்பட்டியிலுள்ள ஒரு தோட்டத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து நாசமானது. சாமராயபட்டியில் செயல்பட்டு வந்த ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சேதமடைந்தது.

இதில் 6 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளது. இதனால் மின் தடை ஏற்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. மேலும் சாலையில் மரங்கள் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Related posts

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்: டெல்லியில் இருந்து 285 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது

வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு: 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை