மும்பையில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு ராய்காட் மாவட்டம் கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்குடியினர் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சில தன்னார்வலர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர் என ராய்காட் போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை, ராய்காட், பல்கார் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கனமழை காரணமாக தனியார் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை பாதித்த இடங்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்ேட பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்