வெப்ப அலை தாக்கம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் வெயில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தேர்தல் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இன்னும் வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து மக்களவை தேர்தல் நேரத்தில் மக்கள் கூடும் இடத்தில் வெப்ப அலை தாக்கத்தை குறைக்க தேவையான திட்டத்தைத் தயாரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.

மேலும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களில் ஐஸ் கட்டிகள், குளிர்ந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு