வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: கோவில்பட்டி ஸ்டேஷனில் பிரதமர் மோடி மீது புகார்

கோவில்பட்டி: மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும், மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியும், தேர்தல் விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், இந்திய கலாச்சார நட்புறக்கழகம் வழக்கறிஞர் ஜெய கிறிஸ்டோபர், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் மாணிக்கராஜ், தமிழ் புலிகள் கட்சி வழக்கறிஞர் பீமராவ், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் மீண்டும் நிராகரிப்பு..!!

விழுப்புரம் பட்டாசு குடோனில் தீ விபத்து: 2 பேர் காயம்

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து