வெட்றா…வெட்றா.. குடும்பமே அட்மிட்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் குடும்பத்திற்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி சுசிலா, தம்பிகள் சங்கர், கலியமூர்த்தி, இவர்களது தாய் உண்ணாமலை ஆகியோர் தங்கள் நிலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களை அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர், அவரது மகன்கள் பாலகிருஷ்ணன், பாபு ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாய், மகள், மகன்களை விரட்டி விரட்டி கொடுவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருந்து தப்பிக்க முயன்றவர்களை விடாமல் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்து கரியாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்கரின் அண்ணன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகர் (54) பாலகிருஷ்ணன்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். நிலத்தகராறில் 4 பேரை கொடுவாளால் வெட்டிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சேலத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் விவகாரம்: புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை

எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு 60 நாட்கள் நீட்டிப்பு : தொழிலாளர் நலத்துறை

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு