2008 மும்பை தாக்குதல் சம்பவம் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்

புதுடெல்லி:மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. பாகிஸ்தானில் தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் சயீத் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹபீஸ் சயீத் ஆரம்பித்த பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி, 2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படிடைக்கும்படி இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை குறித்த கடிதம் சில ஆவணங்களுடன் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Related posts

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே