குர்கா எஸ்யுவி

போர்ஸ் நிறுவனம் குர்கா என்ற 3 கதவுகள் கொண்ட எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் பிஎஸ்6 இன்ஜின் தர நிலை அமலுக்கு வந்ததை தொடர்ந்து அதன் உற்பத்தியை கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி விட்டது. தற்போது மீண்டும் புதிய தர நிலைகளுக்கு ஏற்ப 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் கொண்ட குர்கா எஸ்யுவியை அறிமுகம் செய்ய போர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 91 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 சீட், 6 சீட் மற்றும் 7 சீட் என மூன்று வேரியண்ட்களில் வெளியாகலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு