ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களில் கித்தார், காளான்: சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. இதையொட்டி கார்னேசன் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள காளான் மற்றும் கித்தார் மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு வண்ணங்களை கொண்ட கார்னேசன், செவ்வந்தி மற்றும் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்ட் மலர் அலங்காரமும் மலை ரயில் அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவற்றையும் மற்ற மலர் அலங்காரங்களையும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். மலர் கண்காட்சி வருகிற 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே கண்காட்சிக்கு இனி வர உள்ள சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கூடுதலாக மலர் அலங்காரங்கள் செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி, புதிதாக பல ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு கித்தார், காளான் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மலர் அலங்காரங்களை நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். பல சுற்றுலா பயணிகள் அவற்றின் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். இதன்காரணமாக நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

 

Related posts

சேலத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் விவகாரம்: புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை

எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு 60 நாட்கள் நீட்டிப்பு : தொழிலாளர் நலத்துறை

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு