போலீசில் தன்னைப்பற்றி கூறியதால் பாட்டியை வெட்டிய பேரன்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி டோபிகானா குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (60). இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது பேரன் பாலாஜியுடன் வீட்டிற்கு வந்து, பக்கத்து வீட்டில் வசித்து வரும் தனது மற்றொரு பேரனான ஹென்றி என்பவரின் மகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஹென்றி, ஏன் எனது மகளிடம் பேசுகிறீர்கள் எனக் கேட்டு மலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணைக்காக ஓட்டேரி போலீசார் என்ைன தேடிவந்தபோது ஏன் என்னைப் பற்றி கூறினீர்கள் எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மீன் வெட்டும் கத்தியை எடுத்து மலரை ஹென்றி வெட்டினார். அப்போது தடுக்க வந்த பாலாஜியையும் ஹென்றி வெட்டியுள்ளார். காயமடைந்த இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பாட்டியுடன் ஹென்றிக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வெற்றிவேல் (34), சந்த்ரு (18), காவேரி (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் 17 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹென்றி, ஜோதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்