அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘புதியன விரும்பு- 2023’ முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்

ஊட்டி: தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஊட்டியில் ‘புதியன விரும்பு’ என்கிற பெயரில் முகாம் நடத்தியது. இக்கோடை முகாமில் அவர்களுடைய கலைகளையும் இலக்கிய வாசிப்பையும் வளர்த்து கொள்வதற்கான அமர்வுகள் நடந்தன.

இதன் தொடர்ச்சியாக ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கென ‘புதியன விரும்பு- 2023’ என்கிற கோடை முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமின் துவக்க விழா இன்று காலை 9 மணிக்கு நடந்தது. பள்ளிக் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பறை இசைத்து ‘புதியன விரும்பு- 2023’ முகாமை துவக்கி வைத்து பேசினார்.

ஐந்து நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1040 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!

ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்