அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

 

மண்டபம், ஏப்.27: மண்டபம் வட்டார அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது. சாத்தான்குளம், சேது நகர், அழகன்குளம், குப்பானிவலசை, இருமேனி, தர்ஹி வலசை, என்மனம் கொண்டான், ராமேஸ்வரம், சின்னப்பாலம், வேதாளை, புதுமடம் பெருங்குளம் பனைக்குளம், தேர்போகி பள்ளிகளின் முக்கிய இடங்களில 4 நாள் பிரசாரம் நடந்தது.

எண்ணும் எழுத்தும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், தேன் சிட்டு சிறார் இதழ், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத் திருவிழா, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா, இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனிச்சிறப்பு மையங்கள் குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டது.

பனைக்குளத்தில் நடந்த பிரசாரத்திற்கு ஊராட்சி தலைவர் பவுசியா பானு தலைமை வகித்தார். புதுமடம் தெற்கு பள்ளியில் வரும் கல்வி ஆண்டிற்கு 31 மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர் ஹெப்சி மாரியம்மாளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ், ஆசிரிய பயிற்றுநர்கள் முருகன், வீரஜோதி, மாலதி, வானதி, தமிழ்மலர் வழி நடத்தினர். மண்டபம் வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் வனிதா, ஆசிரிய பயிற்றுநர்கள் ஏற்பாடு செய்தனர்.

Related posts

குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது

முதியவர் மயங்கி விழுந்து சாவு

தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை