தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. சில சமயத்தில் தினசரி சவரன் ரூ.1000 என்ற அளவிலும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி விடுமோ? என்ற அதிர்ச்சியும் நகை வாங்குவோர் இடையே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.54,320க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,870க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வின் மூலம் இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சப்பட்ச விலையையும் நேற்றைய விலை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!