காளி தேவி குறித்த சர்ச்சை படத்துக்கு மன்னிப்பு கோரிய உக்ரைன்: இந்திய கலாச்சாரத்தை மதிப்பதாக விளக்கம்

லண்டன்: இந்து கடவுளான காளி தேவி குறித்த சர்ச்சை புகைப்படத்துக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் மன்னிப்பு கோரியது. உக்ரைனிடமிருந்து ரஷ்யா கையகப்படுத்திய கிரிமியா எண்ணெய் கிடங்கு மீது அண்மையில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக உக்ரைக் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், புகை மண்டலத்தின் நடுவே ஒரு பெண்ணின் படம் வரையப்பட்டிருந்தது. நீல நிறத்தில் இருந்த அந்த பெண்ணின் நீட்டிய நாக்கு, கழுத்தில் மண்டை ஓடுகள் உள்ளிட்டவை இந்த கடவுளாகிய காளி தேவியை போன்று காணப்பட்டது.

உக்ரைன் பாதுகாப்புத்துறை வௌியிட்ட இந்த படம் சமூகவலை தளங்களில் வௌியாகி கடும் சர்ச்சையை எழுப்பியதுடன், உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த படம் நீக்கப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வௌியிட்ட ட்விட்டர் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோருகிறோம். இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை உக்ரைன் மக்கள் மதிக்கின்றனர். சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்த உக்ரைன் விரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்

அசாமில் தொப்பை போலீஸ் பரிசோதனை: ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம்