சிறுமிகள் பலாத்காரம் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த பெற்றோரை இழந்த 17 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இவர்கள் மற்றொரு 13 வயது சிறுமியையும் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக 14, 15, 16 வயது சிறுவர்கள் உட்பட 9 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதில், சிறுவர்கள் 3 பேரும் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இதில் உடுமலையை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு கழிவறையில் பயன்படுத்த வைத்திருந்த சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம்

ஜூன் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை