அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலினி வழக்கு பதிவு செய்து கூடுவாஞ்சேரி அருகே ஒரத்தூர் அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (40) மியூசிக் ஆசிரியர், திருநெல்வேலியைச் சேர்ந்த ராசையா (29) பீடி அட்டெண்டர் ஆகிய இருவரையும் நேற்று இரவு நடத்திய விசாரணைக்கு பின் போக்சோ சட்டத்தில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இருவரும் இதுபோன்று மற்ற சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பெற்றோர் இன்று காலை 8 மணி அளவில் பள்ளி முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.