மாமல்லபுரத்தில் ஜி20 உச்சி மாநாட்டின் நிதி செயற்குழு கூட்டம்: பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு

சென்னை: நிதி செயற்குழு தொடர்பான ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், பல்வேறு பணிக்குழு கூட்டங்கள் நாடு முழுவதும் பாரம்பரிய நினைவு சின்னங்கள் உள்ள நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், நிதி செயற்குழு தொடர்பான ஜி20 உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று துவங்குகிறது. இதில் 20 நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 3 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 150க்கும் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அதன், ஒரு பகுதியாக கல்வி மற்றும் நிதி பணிக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய இரண்டு நடந்தது. இதையடுத்து, ஜி20 உச்சி மாநாட்டின் 3வது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் புளூ தனியார் ரிசார்ட்டில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதில், 20 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு முக்கிய பிரதிநிதிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதே, தனியார் ரிசார்ட்டில் ஜி20யின் அங்கமான டபிள்யு 20 பெண்கள் உச்சி மாநாடு ஜூன் 15 மற்றும் 16 ஆகிய 2 நாள் நடந்தது. ஜி20 பிரதிநிதிகள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடக்கும் தனியார் ரிசார்ட், கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, மாமல்லபுரம் நுழைவு வாயில், பூஞ்சேரி கூட்ரோடு, மாமல்லபுரம் முக்கிய வீதிகள், கடற்கரை பகுதிகள், கலங்கரை விளக்கம் மற்றும் புராதன சின்னங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து