தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) வயது மூப்பு காரணமாக காலமானார்..!!

திருவனந்தபுரம்: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அன்னவீட்டில் மீரா சாகிப்- கதீஜா பீவி தம்பதியருக்கு 1927-ம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவி. சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பணியாற்றிவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி பாத்திமா பீவி ஆவார். தமிழகத்தின் 11வது ஆளுநராக 1997-ம் ஆண்டு முதல் 2001 ஜூலை 3 வரை பாத்திமா பீவி பதவி வகித்தார்.

1950-ல் கேரளத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு முன்சிப் கோர்ட் நீதிபதியானார். மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி, மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றி 1983-ல் ஐகோர்ட் நீதிபதியானார். 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி தனது 96 வயதில் காலமானார். பாத்திமா பீவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது