மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜ முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இணைந்தார்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜ முன்னாள் அமைச்சர் தீபக் ஜோஷி. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகனாவார். இவர் 3 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். மேலும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தீபக் ஜோஷி பாஜவில் இருந்து விலகி உள்ளார். தொடர்ந்து நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில் தீபக் ஜோஷி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related posts

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்

வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்