ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் உண்ணாவிரதம்: மனைவியின் சத்யாகிரக போராட்டத்துக்கு ஆதரவு

திருமலை: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று மகளிரணியினருடன் சத்யாகிரக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சிறையில் சந்திரபாபுவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கடந்த 23 நாட்களாக ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது பொய் வழக்கு எனக்கூறி சந்திரபாபு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்து அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கை ரத்து செய்வதற்கான மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி புவனேஷ்வரி நேற்று ராஜமகேந்திரவரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இதற்கு ‘சத்யமேவ ஜெயதே’ என்று பெயரிடப்பட்டது. அவருக்கு ஆதரவாக சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா. லோகேஷ் டெல்லியிலும், மைத்துனர் பாலகிருஷ்ணா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர்.

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்