காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் ஆங்காங்கே காட்டுத்தீ அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வால்பாறை வாட்டர்பால் எஸ்டேட் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காட்டுத் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று எஸ்டேட் ஊழியர்களுடன் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், 50 ஏக்கரில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகின.

தாளவாடியில்: சத்தியமங்கலம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதியனூர் வனப்பகுதியில் நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்று வீசியதால் வேகமாக பரவியது. வனத்துறையினர் சென்று தீயை அணைக்க முயன்றர். இருப்பினும் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

Related posts

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு

மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்