அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியது

சென்னை: 142 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அந்தமானில் நீண்டநேரம் வானில் வட்டமடித்த நிலையில் வானிலை சீராகாததால் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. விமானம் மீண்டும் திரும்பியதால் சென்னை விமான நிலையத்தில் அந்தமான் பயணிகள் 142 பேர் தவித்து வருகின்றனர். மோசமான வானிலையால் விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் நாளை மீண்டும் அந்தமான் புறப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்