வணிக வளாகத்தில் திடீர் தீ: 37 பேர் மீட்பு

மும்பை: மும்பையின் புறநகர் பகுதியான சாந்தாகுரூசில் உள்ள் வணிக வளாகம் ஒன்றில் திடீரென நேற்று மாலை 5.15 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 5 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். மேலும், அந்த வணிக வளாகத்தில் இருந்த 37 பேரை பத்திரமாக மீட்டனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வணிக வளாகத்தில் மின் இணைப்பு பணிகள் நடந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோல, தானே அம்பர்நாத் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி தீவிபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததுடன், அந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்த்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்