மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள் மட்டும் தூக்குப்பாலம் திறப்பு: பாம்பன் தூக்குப்பாலம் வழியாக அணிவகுத்துச் சென்ற படகுகள்

ராமநாதபுரம்: மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள் மட்டும் திறக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மீன்பிடி படகுகள் அணிவகுத்து சென்றன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பழைய ரயில் பாலத்திற்கு அருகே புதிய ரயில்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நடைபெறும் நிலையில், பழைய தூக்குப்பாலம் வழியாக படகுகள், கப்பல்கள் செல்ல கடந்த 5ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனிடனையே மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததால் சென்னை கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் ஓரு நாள் மட்டும் தூக்குப்பாலத்தை திறக்குமாறு மீன்வளத்துறை முதன்மை செயலாளருக்கு அவசர மனு அளித்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குப்பாலம் வழியாக அணிவகுத்து சென்றனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Related posts

விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!

மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி

காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு!