ரூ.139 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளத்துறை சார்பில் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள் மற்றும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை சார்பில் ரூ.11.65 கோடியில் கட்டப்பட்ட மாணவ விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வள துறை ஆணையர் பழனிசாமி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைதுணை வேந்தர் முனைவர் பெலிக்ஸ் பங்கேற்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்