அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு கவுதம் சிகாமணி எம்பி ஆஜராகாததால் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம் சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 24ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கவுதம் சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கவுதம் சிகாமணி தவிர மற்றவர்கள் ஆஜராகினர். ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாக வும், அதை மாற்றித்தரும்படியும் வாதிட்டார். இதையடுத்து கவுதம் சிகாமணி எம்பி ஆஜராகததால் குற்றச்சாட்டு பதிவை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு

ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை