காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு

பூஞ்ச் : ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் குல்புர் செக்டாரில் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக ஊடுருவ முயற்சிப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வீரர்கள் உடனடியாக அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறியதோடு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் அருகில் இருந்த காட்டிற்குள் தப்பி சென்றனர்.

Related posts

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை