விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது: சிதம்பரத்தில் நிர்மலா சீதாராமன் தீவிர பிரச்சாரம்..!!

கடலூர்: விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சார நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு என்ன செய்தது என்பது குறித்து பட்டியலிட்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 60% உயர்ந்துள்ளது.

ஒன்றிய அரசு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன; அரியலூர், சிதம்பரம் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு சாலை திட்டத்தில் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்த பிரதமருக்கு முன்பு கருப்புக்கொடி காட்டினர். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றசாட்டுகளே இல்லை என குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை கணக்கிடவே முடியாது; அவர்களின் ஊழலால் பின்னோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை, மோடி அரசு மீட்டெடுத்துள்ளது என புகழாரம் சூட்டினார்.

Related posts

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்