தனியார் காய்கறி கடைகளை அகற்ற கோரி தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா

தாராபுரம்: தாராபுரம் உழவர் சந்தைக்கு வெளியே உள்ள காய்கறி கடைகளை அகற்ற கோரி உழவர் சந்தை விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இடைத்தரகர்களின் இடையூறு இன்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உழவர் சந்தைகளை தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார். இந்நிலையில், உழவர் சந்தை இன்றளவும் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு 25.10.2000வது உழவர் சந்தை ஆண்டு துவங்கப்பட்டது.

இந்நிலையில், இடைத்தரகர்கள் மூலம் வாங்கும் காய்கறிளை உழவர் சந்தையை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு கடைகள், சாலையோர கடைகளில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உழவர் சந்தை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கடந்த 9ம் தேதி தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனுமதியின்றி சாலையோரம் காய்கறி கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு நகராட்சி கமிஷனர் முறைப்படி நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், உழவர் சந்தை வெளிப்புற வியாபாரிகள் நாங்கள் வட்டிக்கு பணம் பெற்று சிறு காய்கறி கடைகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருவதாக தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறி மூட்டைகளை சந்தையில் இறக்கி வைத்து விட்டு, சந்தையின் நுழைவு வாயில் முன் அமர்ந்து தனியார் கடைகளை அகற்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உழவர் சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது.

மேலும் காய்கறி வாங்க வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இத்தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் உழவர் சந்தைக்கு சென்று விவசாயிகளிடமும், சாலையோர வியாபாரிகளிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று மாலை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனக்கூறினர்.

இதனால், உழவர் சந்ைத வெளிப்புற (தனியார்) வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். ஆனால், உழவர் சந்தை வியாபாரிகள் தனியார் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக்கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் நேரில் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328க்கு விற்பனை..!!

இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு..!!