திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் விவசாயியிடம் பிக்பாக்கெட் அடித்தவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

*காவல் நிலையத்தில் ஒப்படைப்பு-பரபரப்பு

திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன் (70). இவர், நேற்று திருக்கோவிலூர் பகுதிக்கு விவசாயத்துக்காக விதை பொருட்கள் வாங்குவதற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், விவசாயி ஜெயராமன் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இருந்து இறங்கி நடக்க முயன்ற போது அவரை நோட்டமிட்ட நபர் ஒருவர், ஜெயராமன் கால் சட்டையில் வைத்திருந்த 600 ரூபாய் ரொக்கப்பணத்தை பிக்பாக்கெட் அடித்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

இதில் செய்வது அறியாத தவித்த விவசாயி ஜெயராமன் கூச்சலிட்டார். உடனடியாக பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் பிக்பாக்கெட் அடித்த நபரை விரட்டி சென்று திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் வைத்து மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பிக்பாக்கெட் அடித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் ரவி (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிக்பாக்கெட் அடித்த ரவியை கைது செய்த போலீசார் திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இயற்கை அழகு!

கோடைகால மனநிலை மாற்றமும், பெண்களுக்கு வரும் வேலைப்பளுவும்… எதிர்கொள்வது எப்படி?

கோடை மழையை எதிர்கொள்வது எப்படி?