பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும்: சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

திருவள்ளூர்: சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருவள்ளூர் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த, ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சீனிவாசன், விஜயகுமார், ஜனார்த்தனன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வினோத் ராஜா, ஞானசேகர், பழனி, கௌதம், ஜெயபிரகாஷ், கார்த்திகேயன், பழனி, கங்காதரன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் சிவில் என்ஜினியர் அசோசியேசன் புதிய தலைவராக நவீன்குமார், செயலாளராக காண்டீபன், பொருளாளராக ஜெகதீஷ், துணைத் தலைவர்களாக சரவணன், முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு சங்க நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் பி.எஸ்.விஜயகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின், பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும், கட்டுமான பொருட்கள் விலை அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பொறியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதால் விலை நிர்ணய குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Related posts

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்!