நீதிமன்றத்தை அமலாக்கத்துறை தவறாக வழி நடத்துகிறது: கெஜ்ரிவால் கடும் தாக்கு

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் போலி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை தவறாக வழி நடத்துகிறது என்று கெஜ்ரிவால் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முடித்த பின்னர்செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை மக்களை சித்ரவதை செய்து, வற்புறுத்தி போலியான வாக்குமூலங்களை பெறுகிறது.

சஞ்சங் சிங் வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்டவர் கொடுத்த வாக்குமூலம் வேறு, குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை எழுதியது வேறாக இருப்பது தெரியவந்துள்ளது. மணீஷ் சிசோடியா அவரது செல்போன்களை உடைத்து விட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது. ஆனால் அவற்றை அமலாக்கத்துறை அதன் வசமே வைத்திருக்கிறது. இந்த வழக்கு முற்றிலும் போலியான சாட்சியங்களின் அடிப்படையில் தவறாக புனையப்பட்டுள்ளது. இதன் மூலம் , நீதிமன்றத்தை அமலாக்கத்துறை தவறான ஆதாரங்களுடன் வழி நடத்துகிறது,’’ என்று தெரிவித்தார்.

Related posts

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை