தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலிக்கூத்தாகிவிடும்: ஐகோர்ட் கிளை கருத்து

சென்னை: 2014-ல் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்க வந்தபோது ஏற்பட்ட வன்முறையால் சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தஞ்சை மல்லிப்பட்டினத்திற்கு 2014-ல் பாஜகவின் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்தபோது வன்முறை ஏற்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலிக்கூத்தாகிவிடும் என நீதிபதி தெரிவித்தார்.

Related posts

ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!