தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோவில் விழாவின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் தேர்தல் விதிமுறைக்கும் தொடர்பு இல்லை என சிவகங்கை மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்