தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

சென்னை: தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ.வான சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக செலவு செய்துள்ளார் சி.விஜயபாஸ்கர் என மனுதாரர் தெரிவித்திருந்தார். வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். சி.விஜயபாஸ்கர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி

ஏற்காட்டில் இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்