சாலையை அடைத்து கூடாரம் அரியானா அமைச்சருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

அம்பாலா: அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியில் உள்ள அசீம் கோயல் மக்களவை தேர்தலையொட்டி வீட்டில் விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் நயாப் சிங் சைனி கலந்து கொண்டார்.

அவரது வருகையையொட்டி கோயல் வீடு இருந்த பகுதியில் சாலையில் பிரமாண்ட கூடாரம் அமைக்கப்பட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சாலையின் ஒருபுறம் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலையில் கூடாரம் அமைத்தது தொடர்பாக அசீம் கோயலுக்கு உதவி தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்

1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை