தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா..!!

சென்னை: தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 4 ல் மதுரை மற்றும் சிவகங்கையிலும், ஏப்ரல் 5ம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.

 

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!