தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது, தேர்தலில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். அதனோடு தான் பாஜகவுக்கு எதிரானவன் என்ற கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்தார்.

அப்போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும், அவருக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து காட்சிகள் தற்போது வெளியான நிலையில் மக்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை!

பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்