குடியாத்தத்தில் வங்கிக்கு சென்ற முதியவரை சரமாரி தாக்கி பணம் பறிப்பு: 3 பேருக்கு வலை

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணு (69). இவர் நேற்றிரவு குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ₹1.50 லட்சத்தை டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையம் பழுதடைந்திருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பணத்துடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகல் கூட்ரோடு பகுதி வழியாக பைக்கில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த 3 பேர் கும்பல் இவரை திடீரென வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த வேணு, பைக்கை நிறுத்தினார்.

அந்த நேரத்தில், 3 பேரும் வேணுவை சரமாரி தாக்கி பணத்தை கேட்டனர். மறுத்ததால் மீண்டும் சரமாரி தாக்கி கீழே தள்ளி விட்டு ₹1.50 லட்சம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் நேற்றிரவு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்த 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது