முட்டை விலை 425 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் நாமக்கல் மண்டலத்தில் மைனஸ் இல்லாத முட்டை கொள்முதல் விலை, தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையை பண்ணையாளர்கள், வியாபாரிகள் கடைபிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக முட்டை விலையில் 5 காசுகள் வீதம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 415 காசில் இருந்து 425 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இங்கும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

ஏப்-28: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்

சில்லி பாயின்ட்…