புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் : சித்தராமையா எச்சரிக்கை!!

பெங்களூர் :புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வி துறையில் கலப்படம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடாகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சித்தராமையாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். எழுத்தாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பெற்று கொண்ட அவர், எழுத்தாளர்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கன்னட போராளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் சித்தராமையா உறுதி அளித்தார். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் என கூறிய அவர், கல்வி ஆண்டு தொடங்கி உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சட்டத்தை கையில் எடுத்து வகுப்பு வாத கலவரம் செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் சித்தராமையா எச்சரித்துள்ளார்.

Related posts

சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்

பேராயர் யோஹன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி