போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை எதிர்கொள்ளத் தயார் : இயக்குனர் அமீர்

மதுரை : போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன் என மதுரையில் தொழுகைக்கு பின்னர் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசிய போது, “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள நேரம் வேண்டும். ஜாபர் சாதிக் உடன் பயணித்தவன் என்ற முறையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தவறில்லை; நான் எங்கும் ஓடி ஒளியவோ, மறைந்து கொள்ளவோ தேவை ஏற்படவில்லை; ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாலேயே என்னை குற்றவாளி எனச் சொல்ல முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.