கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்

திருச்சி: திருச்சி கொள்ளிடம் பாலத்தில் சென்டர் மீடியனில் 1.5 கி.மீ தூரம் இளைஞர் ஒருவர் டிவிஎஸ்-50ஐ ஓட்டி அலப்பறை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் சிலர் பைக்குகளில் வீலிங் செய்வது, பேருந்து முன் தண்டால் எடுப்பது, சாலையை மறித்து நடனம் ஆடுவது போன்ற அலப்பறைகளில் ஈடுபட்டனர். திருச்சி கொள்ளிடம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மேலே டிவிஎஸ் 50ஐ தூக்கி வைத்து இளைஞர் ஒருவர் அதில் ஓட்டிச்சென்றார். இவ்வாறு சுமார் 1.5 கிமீ தூரம் அவர் டூவீலரை ஓட்டிச்சென்றார். இதை வேடிக்கை பார்த்த மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2 மூதாட்டிகள் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: போதை வாலிபருக்கு தர்மஅடி

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்