ஜன.29ல் திமுக மாணவரணி மாவட்ட, மாநில, துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: ஜன.29-ல் திமுக மாணவரணி மாவட்ட, மாநில, துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் கோவையில் கூட்டம் நடைபெறுகிறது.கோவை பீளமேடு காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் திமுக மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. பிப்.1-ல் சென்னையில் யுனைடெட் ஸ்டூடன்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பின் பேரணி குறித்து ஆலோசிக்கப்படும். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை இறுதிப் போட்டி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாணவரணியின் ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சி.வி.எம்.பி.எழிலரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்