மதுராந்தகத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை

மதுராந்தகம்: கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் கழகப்பவள விழா ஆண்டை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. காஞ்சிபுரம், உத்திரமேரூர் மதுராந்தகம் செய்யூர் ஆகிய தொகுதிகளில் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை திமுகவினர் சேர்ப்பதற்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதில் மதுராந்தகம் தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுராந்தகம் நகர் மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச்செயலாளர்கள் மலர்விழி குமார், கோகுலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், தொகுதி பூத்கமிட்டி தலைமை கழக பார்வையாளர் காண்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்ப்பு படிவங்களை ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்களிடம் வழங்கினர். ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, சத்யசாய், சிவக்குமார், மதுராந்தகம் நகரமன்ற துணைத்தலைவர் சிவலிங்கம், பேரூர் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் வினோத்குமார், கிளை செயலாளர்கள் மகேந்திரன், கேசவன் குன்னத்தூர் ஊராட்சி தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் அயலக அணி மாநில துணை செயலாளர் பரிதி இளம் சுருதி புதிய உறுப்பினர் சேர்க்கையினை துவக்கி வைத்தார்.

இதில் பெண்கள், இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர். திருக்கழுக்குன்றம் ஒன்றிய அவைத் தலைவர் நல்லூர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் தனசேகரன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கரியச்சேரி சேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், பரந்தாமன், துணை அமைப்பாளர் எம்.கே.தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம்

ஜூன் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை