சக கைதிகளுக்கு தொந்தரவு: கஷாயத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற கிரீஷ்மா வேறு சிறைக்கு மாற்றம்


திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன். குமரி மாவட்டம் நெய்யூரிலுள்ள கல்லூரியில் படித்து வந்த இவர், களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற இளம்பெண்ணை காதலித்தார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். போலீஸ் விசாரணையில் கிரீஷ்மா தன்னுடைய வீட்டில் வைத்து ஷாரோனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கிரீஷ்மா திருவனந்தபுரம் அட்டக்குளங்கரையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிரீஷ்மா தங்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக சக பெண் கைதிகள் சிறை அதிகாரியிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர் திருவனந்தபுரத்திலிருந்து மாவேலிக்கரை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

Related posts

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்