ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிறமாற்றம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடை நிற மாற்றத்துக்கு காங்கிரஸ், பாஜ கண்டனம் தெரிவித்துள்ளன. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்யமந்திரி சத்ர சத்ரி பரிதான் யோஜனா திட்டத்தின்கீழ் இலவச சீருடைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு 2 ஜோடி இலவச சீருடைகள், ஒரு ஜோடி காலணிகள், 2 ஜோடி காலுறைகள், ஒரு டி-சர்ட், ஒரு டிராக் பேண்ட் மற்றும் ஒரு தொப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சீருடைகள் வௌ்ளை மற்றும் கரும்பச்சை நிறத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜ கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச சீருடைகளின் நிறம் ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் வடிவமைக்கப்படுவது மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதிக்கும். அரசின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு