நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் நீண்டநாள் கோரிக்கை : டிடிவி தினகரன்

சென்னை : பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்நது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், “நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள்; எந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவிக்கும். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்தவுடன் அமமுகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள்; கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்ததால் குறைத்துத் தந்துள்ளார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு