தீட்சிதர்களுக்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆளுநர் தான் கூறியது தவறு என மன்னிப்பு கோரா வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இதற்கு அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.

இந்த வீடியோகள் அதிர்ச்சி அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக பேசி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விடியோவை பார்த்து தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

விருப்பம் இன்றி யாருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டாலும் அது தவறுதான் என தெரிவித்து இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குழந்தை திருமணம் நடத்தி வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக ஆளுநர் பேசி வரும் கருத்துகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள விடியோவை ஆதாரமாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்