தேவகோட்டையில் சிவன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

 

தேவகோட்டை, ஏப்.26: தேவகோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக நேற்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கொடி மரத்தின் அருகில் விநாயகரும், சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல் வைத்து பட்டாடை கட்டப்பட்டு ஒருமுக, பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூலம், நந்தி, சங்கு உருவம் பொறித்த கொடி, வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். 5ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேரோட்டம், 11ம் நாள் தெப்பத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Related posts

திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்